search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டெர்லை ஆலை"

    ஸ்டெர்லைட் விவகாரத்தில் பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது போன்ற மோசடி நாடகத்தில்தான் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது என்று வைகோ தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko #SterlitePlant
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2018 மே 22-ம் நாள் ஸ்டெர்லைட்டை எதிர்க்கும் போராட்டங்களை நசுக்கும் நோக்கத்துடன் தமிழக அரசின் காவல்துறை ஈவு இரக்கமின்றி 13 பேரை சுட்டுக்கொன்றது. அதில் 11 பேருக்கு உச்சந்தலையிலும், மார்பிலும் குண்டுகள் பாய்ந்துள்ளன என்று ஆதார பூர்வமாக செய்தி வந்துள்ளது.

    லட்சக்கணக்கான மக்கள் ஆலைக்கு எதிராக எரிமலையாய் சீறியதால் அ.தி.மு.க. அரசு மிகப்பெரிய கபட நாடகத்தை நடத்தியது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் ஆலையை மூடுவதற்குரிய ஆணைகளைப் பிறப்பித்தன.

    2018 டிசம்பர் 15-ந்தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இயக்கலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வு அளித்தத் தீர்ப்பு, அமர்வின் முறையான முத்திரைகளோடு வெளி வருவதற்கு முன்பே ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமத்தின் இணைய தளத்தில் பிற்பகல் 1.15 நிமிடத்துக்கே பதிவாகியது அநீதியின் உச்ச கட்டமாகும்.


    தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தினுடைய தீர்ப்பு டிசம்பர் 15-ந்தேதி பிற்பகல் 1.15 நிமிடத்துக்கு வேதாந்தா குழுமத்திற்கு செய்தி வெளியிடும் அமைப்பாக உள்ள அப்பாஸ் பாண்டியா அமைப்பின் மூலம் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டது. நீதித்துறை வரலாற்றில், ஸ்டெர்லைட் வழக்கில் நீதி குழிதோண்டி புதைக்கப்பட்டது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது.

    தொடக்கத்திலிருந்தே தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவே செயல்பட்டதை உரிய ஆதாரங்களோடு பக்கம் பக்கமாக என்னால் பட்டியலிட முடியும். இப்பொழுதும் ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு மிக தந்திரமாக தமிழக அரசு ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்த முயலும்.

    சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை டிசம்பர் 21-ந்தேதி ஆணைப் பிறப்பித்துள்ள நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தைத் தற்போது அணுகக்கூடாது; கேவியட் மட்டும் தாக்கல் செய்ய வேண்டும்.

    சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தை அணுகினால் அப்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்துக்குச் செல்லலாம்.

    தமிழக அரசு, சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, ஆலையை மூடுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். தமிழக அமைச்சரவையைக் கூட்டி, ஆலையை மூடுவதற்கான காரணங்களை வரிசைப்படுத்தி, ஸ்டெர்லைட் ஆலையை மூடும் கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும். அத்துடன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தானும் வழக்குத் தொடுக்க வேண்டும்.

    ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு, “முயலோடும் சேர்ந்து ஓடுவது; அதே வேளையில் வேட்டை நாயுடன் சேர்ந்து விரட்டுவது, தமிழில் ஒரு பழமொழி உண்டு, “பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது”. இந்த மோசடி நாடகத்தில்தான் தமிழக அரசு ஸ்டெர்லைட் பிரச்சனையில் ஈடுபட்டு வருகிறது.

    இவ்வாறு வைகோ கூறி உள்ளார். #MDMK #Vaiko #SterlitePlant
    தொழிற்சாலைகளை மூடுவது பொருளாதார தற்கொலை என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஜக்கிவாசுதேவ் கருத்து கூறியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். #Sterlite #jaggivasudev
    சென்னை:

    தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

    இந்நிலையில், சமீபத்தில் லண்டனுக்கு சென்ற யோகா குரு பாபா ராம் தேவ் வேதாந்தா குழுமத்தின் தலைவரும், ஸ்டெர்லைட் ஆலையின் நிறுவனருமான அனில் அகர்வாலையும், அவருடைய மனைவியையும் நேரில் சந்தித்துப் பேசினார். அதன்பின்னர் பாபா ராம்தேவ் ஸ்டெர்லைட் ஆலையின் பெயரைக் குறிப்பிடாமல் அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.

    இதற்கிடையே, கோவை மாவட்டத்தில் ஈஷா அறக்கட்டளை நடத்தி வரும் சத்குரு ஜக்கி வாசுதேவ், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

    நான் தாமிரம் உருக்கும் தொழிலில் வல்லுநர் இல்லை. ஆனால், இந்தியாவில் தாமிரத்தின் பயன்பாடு அதிகம் என்பதால், அதன் தேவையும் அதிகம் என்பது மட்டும் எனக்கு தெரியும். நாம் சொந்தமாக தாமிரம் உற்பத்தி செய்யாமல் இருந்தால், சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியது இருக்கும்.



    சுற்றுச்சூழல் விதிமுறை மீறல்கள் குறித்து சட்டப்பூர்வமாகவே அணுக வேண்டும். மிகப்பெரிய தொழில்களை அடித்துக்கொல்வது என்பது பொருளாதார தற்கொலையாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஜக்கி வாசுதேவ் கருத்துக்கு நடிகர் சித்தார்த் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Sterlite #jaggivasudev
    ×